×

ஊட்டி அரசு கல்லூரி என்சிசி., மாணவர்கள் சாதனை

 

ஊட்டி,ஏப்.21: கோவையில் நடந்த என்சிசி., மாணவர்களுக்கான போட்டியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சேம்பியன் பட்டத்தை வென்றனர். கோவை மாவட்டம் பிஎஸ்ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பராக்ராம் 2023 என்ற என்சிசி., மாணவர்ளுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 40 பேர் பங்கேற்றனர்.

இவர்கள், பல்வேறு போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பதக்கங்களை வென்றனர். மேலும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி என்சிசி., மாணவர்கள் தட்டிச் சென்றனர். இவர்களுக்கு 31 தமிழ்நாடு தனிப்பிரிவு என்சிசி., கமாண்டர் கர்னல் ஸ்ரீனிவாஸ், என்சிசி., அதிகாரி விஜய் மற்றும் பேராசிரியர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

The post ஊட்டி அரசு கல்லூரி என்சிசி., மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Ooty Government College NCC ,Achievement ,Ooty ,Government Arts College ,NCC ,Coimbatore ,Coimbatore… ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்