×

நத்தம் பாலப்பநாயக்கன்பட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா

நத்தம், ஏப். 21: நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இதில் அக்னிசட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, கிடாய் வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். நேற்று மாலையில் அம்மன் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் பூஞ்சோலை எனும் இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post நத்தம் பாலப்பநாயக்கன்பட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Muthalamman Temple Festival ,Natham ,Balapanayakanpatti ,Agnichatti ,Natham Balapanayakanpatti ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...