×

புத்தக திருவிழா, கலைவிழா விழிப்புணர்வு பலூன்

 

தூத்துக்குடி, ஏப். 21: தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு பகுதியில் 4வது புத்தக திருவிழா, இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழா நடைபெறும் இடம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர், புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலூனை பறக்கவிட்டார்.
தொடர்ந்து கனிமொழி எம்பி கூறியதாவது: புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் தமிழ்நாட்டின் முக்கியமான கருத்தாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் வாசிப்பு பழக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் தங்களது கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். புத்தக திருவிழாவில் ஏறத்தாழ 110 புத்தக பதிப்பகங்களில் இருந்து புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட இருக்கிறது. மேலும் கலை ஆர்வத்தை மேம்படுத்திடும் பொருட்டு வரும் 28ம் தேதி மண் சார்ந்த கலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் நெய்தல் கலை விழா தொடங்குகிறது.தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் சிவகளையில் இருக்கின்ற அகழ்வாராய்ச்சிகள் பற்றிய ஒரு அரங்கு, இங்கு உருவாக்கப்பட இருக்கிறது. புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட புகைப்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்கு தனியாக அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழாவில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் காந்திமணி, சுப்புலட்சுமி, ரங்கசாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புத்தக திருவிழா, கலைவிழா விழிப்புணர்வு பலூன் appeared first on Dinakaran.

Tags : Book Festival, ,Art Festival Awareness Balloon ,Thoothukudi ,4th ,Book Festival ,Shankarapperi Exclusion Area ,Ettayapuram Road, Thoothukudi ,Book Festival, Art Festival Awareness Balloon ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்