×

தொடர் மழையால் மண் அரிப்பு பிறமடை ஓடைக்குள் விழும் நிலையில் ‘டிரான்ஸ்பார்மர்’: மாற்றியமைக்க சொக்கலிங்கபுரம் பகுதி மக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைதிருச்சுழி ரோட்டில் மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான பிறமடை ஓடை உள்ளது. இந்த ஓடை கரையில் மின்வாரியம் மூலம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் இந்த பிறமடை ஓடை குளம் போல் தேங்கி உள்ளது. இதிலிருந்து ஓடையின் மறுபுறம் உள்ள 2 டிரான்ஸ்பார்ம்களுக்கு மின்வயர் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த டிரான்ஸ்பார்ம்கள் மூலம் சொக்கலிங்கபுரம், நேரு மைதானம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஓடையில் மழைநீர் நிறைந்துள்ளதால் டிரான்ஸ்பார்ம் சுற்றி மண்அரிப்பு ஏற்பட்டு ஓடையில் விழும் நிலையில் உள்ளது. டிரான்ஸ்பார்ம் விழுந்தால் சொக்கலிங்கபுரம் பகுதி முழுவதும் மின்தடை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மின்வாரிய நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பிறமடை ஓடை கரையோரம் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் தொடர் மழை பெய்தால் ஓடை நிரம்பி விடும். மேலும் இந்த மழையால் கரையோரங்களில் மண் அரிப்பு ஏற்படும். இதனால், இங்குள்ள டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னே டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’, என்றனர்….

The post தொடர் மழையால் மண் அரிப்பு பிறமடை ஓடைக்குள் விழும் நிலையில் ‘டிரான்ஸ்பார்மர்’: மாற்றியமைக்க சொக்கலிங்கபுரம் பகுதி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chokkalingapuram ,Aruppukkottai ,Aruppukkottai Thiruchuzhi Road ,Biramadai ,Meenakshi ,Chokkanath temple ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டையில் மீனாட்சி கோயில்...