×

புத்தரின் போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: புத்தரின் போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார். சர்வதேச புத்த மத உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. வெளிநாட்டு அறிஞர்கள், புத்த துறவிகள் கலந்து கொண்ட மாநாட்டில், பிரதமர் மோடி பேசுகையில்,‘‘புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை பாதித்துள்ளன. மக்கள் தங்கள் நலன்களுடன் நாடு மற்றும் உலக நலனுக்கும் முன்னுரிமை அளிப்பது காலத்தின் தேவையாகிறது. ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.

புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். ஒவ்வொரு மனிதனின் வலியையும் தனது வலியாக கருதியது. புத்தரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளோம். நவீன பிரச்னைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன. அவரது போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை வழங்குகின்றன. உலகம் போர், பொருளாதார ஸ்திரத்தன்மை, தீவிரவாதம், மதத்தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்தித்து வருகிறது’’ என்றார்.

The post புத்தரின் போதனைகள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Buddha ,PM Modi ,New Delhi ,Modi ,International Buddhist ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?