![]()
சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு appeared first on Dinakaran.
