×

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்து விபத்து: 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் பாடா துரியன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இச்சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியிருக்கலாம். அதனால் வாகனம் எரிந்திருக்கலாம்.

பிம்பர் காலி பகுதிக்கு அருகே மதியம் 3 மணியளவில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகளால் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, பின்னர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதன்காரணமாக வாகனம் தீப்பிடித்தது” என தெரிவித்துள்ளது. இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

The post ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்து விபத்து: 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Punch ,Jammu and Kashmir ,Jammu and ,Kashmir ,Poonch Region ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...