×

சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்றிடுக: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்.

சேலம்: சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சுபாஷ் அனுஷ்யா தம்பதியினரை சுபாஷின் தந்தை தண்டபாணி கடுமையான தாக்குதலில் சாதிய வன்மத்தோடு ஈடுபட்டார்.இதனால் சம்பவ இடத்திலேயே சுபாஷ் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் பலியாகினர்.

மேலும் பல போராட்டங்களுக்குப் பின்பு பலத்த காயங்களுடன் அனுசியா உயிர் தப்பினார். தற்போது அனுசியா சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமிழகத்தில் தற்போது சாதி ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை திருமணம் செய்ததற்காக தந்தையே தன் மகனையும் தாயையும் படுகொலை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சமூக நீதி மண்ணில் தொடரும் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதில் அமைப்பின் மாவட்ட செயலாளர் வி. இளங்கோ பாதிக்கப்பட்ட அனுசுயாவின் பெற்றோர், சகோதரர், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மேற்கு மாநகர செயலாளர் எம். கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். எம். தேவி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ. ஞானசௌந்தரி, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.கருப்பண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அருண் குமார், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம், சேது மாதவன், ஜி. கவிதா உள்ளிட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பங்கேற்றனர்.

The post சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்றிடுக: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம். appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,caste arrow ,Caste Massacre ,Eradication of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...