×

தஞ்சாவூரில் முதல் முறையாக அருங்காட்சியகத்தில் அரேங்கேற்றப்பட்ட இசை நடன நீரூற்று காட்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முதல் முறையாக அருங்காட்சியகத்தில் அரேங்கேற்றப்பட்ட இசை நடன நீரூற்று காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அருங்காட்சியமாக மாற்றப்பட்ட தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது இதில் பழங்கால பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், இசை கருவிகள் என காட்சிப்படுத்தபட்டுள்ளன.

அரியவகை பறவைகள் சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருங்காட்சியகத்திற்கு மேலும் அழகூட்டும் வகையில் இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இசை நீரூற்று நடனத்தை பள்ளி கல்லூரி மாணவிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

The post தஞ்சாவூரில் முதல் முறையாக அருங்காட்சியகத்தில் அரேங்கேற்றப்பட்ட இசை நடன நீரூற்று காட்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dance Fountain ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...