×

தொட்டபெட்டாவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா தமிழகத்தின் உயரமான சிகரங்களில் ஒன்றான இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்வையிட்டால் குன்னூர் நகரம், வெலிங்டன் ராணுவ மையம், அவலாஞ்சி, ஊட்டி நகரம் மற்றும் முதுமலை உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்க முடியும். இதனால் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று பார்வையிட்டு மகிழ்வார்கள். இந்நிலையில் ஊட்டியில் தற்போது கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ள நிலையில் இம்மாத இறுதியில் பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்படும்.

மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கணிசமான அளவிற்கு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

The post தொட்டபெட்டாவில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Totabetta ,Oothi Thotapetta ,Tamil Nadu ,Totapetta ,
× RELATED தமிழக – ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை...