×

சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம், மெப்ஸ் வளாகத்தில் 5 ஆண்டுகளில் இரு மடங்கு தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம், மெப்ஸ் வளாகத்தில் 5 ஆண்டுகளில் இரு மடங்கு தொழில் நிறுவனங்களை அதிகரித்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் என்னும் சென்னை சிறப்பு பொருளாதார ஏற்றுமதி மண்டலம் செயல்படுகிறது. இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 75 நிறுவனங்கள் செயல்படுகின்றன, இங்கு நில சட்டை பணியாளர்கள் எனப்படும் குறைந்த வருவாயில் பணியாற்றுபவர்களுக்கு மெப்ஸ் தொழில் வளாகம் நிறுவனம் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு மருத்துவ முகம் துவக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மெப்ஸ் மேம்பட்டு அதிகாரி அலெக்ஸ் பால், மெப்ஸ் அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்படுவதற்கான திட்டம் குறித்து விளக்கினார். நாட்டுக்கு வருவாய் இருமடங்கு அதிகரிப்பதை இலக்காக வைத்து மெப்ஸ் தொழில் வளாகம் மேம்படுத்தப்படும் என்று அலெஸ்ப்பால் கூறியுள்ளார்.

The post சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம், மெப்ஸ் வளாகத்தில் 5 ஆண்டுகளில் இரு மடங்கு தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram Sanatorium ,Chennai ,Meps Campus ,Meps ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...