×

அஜித் பவார் பாரதிய ஜனதாவுடன் இணைந்தால் கூட்டணி ஆட்சியில் இருந்து விலகி விடுவோம்: ஏக்நாத் ஷிண்டே அணி அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து பிரிந்து பாரதிய ஜனதாவுடன் சேரவிருப்பதாக செய்திகள் வௌிவந்தன. இந்த செய்தியை பின்னர் அஜித் பவாரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் மறுத்தனர். ஆனால் ஒருவேளை அஜித் பவார் தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாரதிய ஜனதாவில் இணைந்தால், ஆட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா விலகிவிடும் என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து எங்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் நேரடியாக பாஜகவுடன் செல்லாது என்று நான் கருதுகிறேன். தேசியவாத காங்கிரஸ் துரோகம் செய்யும் கட்சி ஆகும். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சியுடன் கூட்டணி சேர மாட்டோம். ஒரு வேளை பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுமேயானால் அந்த கூட்டணியை மகாராஷ்டிரா மாநில மக்கள் விரும்பமாட்டார்கள். நாங்களும் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்றார்.

The post அஜித் பவார் பாரதிய ஜனதாவுடன் இணைந்தால் கூட்டணி ஆட்சியில் இருந்து விலகி விடுவோம்: ஏக்நாத் ஷிண்டே அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ajit Bhawar ,Bharatiya Janath ,Egnath Shinde Team ,Mumbai ,Ajit Bawar ,Nationalist Congress ,Maharashtra ,M. l. PA ,Bharatiya ,Egnath Shinde ,
× RELATED மராட்டிய பாஜக கூட்டணியில் தொடரும்...