×

மனிதர்களின் மனம் மட்டுமல்ல யானைகளின் மனமும் குளிர்கிறது: அமைச்சர் பெருமிதம்

திமுக ஆட்சியில் மனிதர்களின் மனம் மட்டுமல்ல, யானைகளின் மனமும் குளிர்விக்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) பேசியதாவது: யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டம் ஆகும். தற்போதும் அதை நடத்த வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: கோயில்களில் 29 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு உடல்நலம் சரியில்லாதபோது, வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றியவர் நமது முதல்வர். தற்போது யானைகள் குளித்து மகிழ 27 நீச்சல் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மனிதர்களின் மனம் மட்டுமல்ல, யானைகளின் மனமும் குளிர்விக்கப்படுகிறது.

The post மனிதர்களின் மனம் மட்டுமல்ல யானைகளின் மனமும் குளிர்கிறது: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Prideham ,Shekharbabu ,DMK ,Tourism ,Hindu Charities Department ,
× RELATED ஆட்சி மீது குறை சொல்ல முடியாததால்...