×

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: நெல்லை மாவட்டத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படும் கைதிகளின் பற்களை கற்களால் தாக்கி உடைத்ததாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது கடந்த திங்கள் கிழமை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட்டது. விசாரணை கைதிகளை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பாப்பாக்குடி காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக குற்றம் சட்டப்பட்டது.

இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்: அம்பாசமுத்திரம் பல்வீர் சிங் இகாப உதவி கண்காணிப்பாளர் மற்றும் காவல் அலுவலர்கள், சிலர் மீது தாக்குதல் நடத்தியதாகச் கூறிய புகார், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்கு தற்போது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையில் உள்ளது,

மேலும்,பெ.அமுதா, இ.கா.ப., தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இடைக்கால அறிக்கையில், குற்றப் இந்த விசாரணை புலனாய்வுத் துறையால் இனி (CBCID) குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் நடத்தப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளது.

அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு கு.எண்.01/2023ச/பி. 323, 324, 326 மற்றும் 506(1) இதச மற்றும் இது தொடர்புடைய அனைத்து குற்ற வழக்குகளும் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (CB CID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

The post விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Sailendrababu ,CBCID ,CHENNAI ,ASP ,Balveer Singh ,Nellai district ,CBCID.… ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு