×

திடீர் மாரடைப்பு காரணமாக தெலுங்கு காமெடி நடிகர் மரணம்

விசாகப்பட்டினம்: மாரடைப்பு காரணமாக தெலுங்கு நகைச்சுவை நடிகர் அல்லு ரமேஷ் திடீரென காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்லு ரமேஷ் (52) விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது வீட்டில் காலமானார். அல்லு ரமேஷின் திடீர் மறைவால், தெலுங்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அல்லு ரமேஷின் மறைவுச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஆனந்த் ரவி, ‘அல்லு ரமேஷ் அவர்களே, உங்கள் மறைவுச் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உங்களை காணாமல் தவிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். நாடகங்களின் மூலம் திரைத்துறையில் கால்பதித்த அல்லு ரமேஷ், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபல வெப் சீரிஸ் ஒன்றில் தந்தை வேடத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திடீர் மாரடைப்பு காரணமாக தெலுங்கு காமெடி நடிகர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,Allu Ramesh ,Allu… ,
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!