×

நீடாமங்கலத்தில் மீண்டும் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் மீண்டும் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 தடவைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு காலை சென்னை-மன்னை,கோவை-மன்னை,வாரத்தில் 3 நாட்கள் திருப்பதி-மன்னார்குடி,வாரம் ஒருநாள் பகத்கி ஹோதி (டெல்லி-மன்னை), யர்ணாகுளம்-காரைக்கால், யர்ணாகுளம்-வேளாங்கன்னி உள்ளிட்ட பல விரைவு ரயில்களும், காலை மன்னை-மானாமதுரை,மன்னை-மயிலாடுதுறை,திருச்சி-நாகூர்,திருச்சி-வேளாங்கன்னி உள்ளிட்ட பயணிகள் ரயில் தினமும் சென்று வருகிறது. அது மட்டும் அல்லாமல் நிலக்கரி ஏற்றி பல சரக்கு ரயில்கள் தினமும் செல்கிறது.

நீடாமங்கலம் ,மன்னார்குடி தாலுகா பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு மையங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கு ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது. பொது விநியோக திட்டத்திற்கும் அரிசி மூட்டைகள் ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது. வெளியூர்களிலிருந்து தனியார் சிமென்ட் மூட்டைகள் ரயில் வேகனில் இறக்கப்பட்டு செல்கிறது. இதனால் போடப்படும் ரயில் கேட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பொது மக்கள் பாதிப்படைகின்றனர். பல தடவை மூடப்படும் இந்த ரயில்வே கேட்டால், அவசர சிகிச்சைக்கு திருவாரூரிலிருந்து- தஞ்சாவூருக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது பலர் இறந்து வீட்டிற்கு திரும்ப கொண்டு சென்றதும் உண்டு. பேரிடர் காலத்தில் அவசரத்திற்கு செல்லும் தீயணைப்பு வாகனமும் மாட்டியதும் உண்டு. ரயில்வே கேட்டால் நேர்முக தேர்வுக்கு சென்ற மாணவ, மாணவிகள் கேட்டில் மாட்டி கால தாமதமன ஏற்பட்டு வீடு திருபியதும் உண்டு. இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்ளிலிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் நீடாமங்கலத்தில் போடப்படும் ரயில்வே கேட்டில் மாட்டி தான் செல்ல வேண்டும். இதனால் நீடாமங்ஙலம் கேட்டிற்கு பெருமை என ஏளனமாக பேசுபவர்களும் உண்டு.

எனவே நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், பொது அமைப்புகள்,அரசியல் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மன்னார்குடி எம்எல்எ டி.ஆர்.பி.ராஜாவின் கோரிக்கையை ஏற்று, நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என அறிவித்தார். அதற்கான ஒரு நிதியும் ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி எந்த நிலையில் உள்ளது என தெரிய வில்லை. எனவே தமிழக முதல்வர் மக்கள் நலன் கருதி நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படுமா? என மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.

The post நீடாமங்கலத்தில் மீண்டும் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Nidamangalam ,Niedamangalam ,Nidamangalam Day ,Thiruvarur District ,
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...