×

நாகூர் பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாய் நிரந்தரமாக அகற்றம்: நாகை மாவட்ட ஆட்சியர், சிபிசிஎல் அதிகாரிகள் நேரில் ஆய்வு

நாகை: நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாய் முழுவதுமாக அகற்றப்பட்டது. நகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கடற்கரை பகுதியில் ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் . கச்சா எண்ணெய் குழாய்களை பதித்திருந்தது. கடந்த மாதம் இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து குழாயில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனை தொடர்ந்து மீனவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கச்சா எண்ணெய் குழாயை நிரந்தரமாக அகற்றுவதாக சிபிசிஎல் நிறுவனம் அறிவித்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிக்கப்பட்டு இருந்த கச்சா எண்ணெய் குழாயை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சிபிசிஎல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

The post நாகூர் பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாய் நிரந்தரமாக அகற்றம்: நாகை மாவட்ட ஆட்சியர், சிபிசிஎல் அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagur ,Nagai District Ruler ,CPCL ,Nagai ,Nagur Pattinacheri ,Dinakaran ,
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...