×

சென்னை நொச்சிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்:

மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார். மெரினா லூப் சாலை மீனவர்கள் போராட்டம் குறித்து பேரவையில் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் பேசினார். மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

மீனவர்கள் போராட்டம் – கவன ஈர்ப்பு தீர்மானம்

நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக பேரவையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. மீனவ மக்களுக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை. மீனவர்களை அவர்களின் சொந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வேல்முருகன் கூறினார்.

கடற்கரை ஓரத்தில் மீனவர்களே குடியிருக்கின்றனர் என பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்தார். மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டார். லூப் சாலையில் மீன் கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டாலும் மீனவர் நலனுக்காக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

The post சென்னை நொச்சிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Nochipipi ,O.O. Pannerselvam ,
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...