×

வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

விருதுநகர், ஏப்.19: விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் ஜேசுமணி(50), இவர் நேற்று முன்தினம் காலை மல்லாங்கிணர் ரோடு தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று விட்டு, சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(25), அல்லம்பட்டியை சேர்ந்த அரவிந்தராஜ்(27) இருவரும் கத்தியை காட்டி மிரட்டி ஜேசுமணி சட்டைப்பையில் இருந்து ரூ.1,300 பணத்தை எடுத்துள்ளனர். ஜேசுமணி கையில் கட்டியிருந்த வாட்சை கழட்டித்தர கோரி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளனர். திருடன், திருடன் ஜேசுமணி கத்த, உடனே அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். கத்தியை காட்டி பக்கத்தில் வந்தால் குத்தி கொன்று விடுவேன் என மிரட்டி 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து கிழக்கு போலீசில் ஜேசுமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிகண்டன் என்ற கேடி மணி, அரவிந்தராஜ் என்ற சேவு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jesumani ,Allambatti, Virudhunagar ,Mallanginar ,Road ,Head Post Office ,Dinakaran ,
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு