×

பராமரிப்பு பணிக்காக பரளி ரயில்வே கேட் 3 நாட்களுக்கு மூடல்

குளித்தலை, ஏப். 19: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் தண்ணீர் பள்ளியில் இருந்து பரளி கருங்கல்லாப்பள்ளி, கூடலூர், திம்மம்பட்டி, கணக்கப்பிள்ளையூர், கல்லுப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு விவசாயிகள், கிராம பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், தனியார்நிறுவனத்திற்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் இவ்வழியாக தான் தினந்தோறும் கடந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் கரும்பு, நெல், வாழை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர். இதனால் தினமும் இந்த வழியாக விவசாய இடுபொருட்கள் வாழை உள்ளிட்ட பொருட்களை வாகனத்தில் ஏற்றி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், இந்த ரயில்வே கேட் நாள் முழுவதும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பரளி ரயில்வே கேட் லெவல் கிராசிங் கேட் நம்பர் 55 ல் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று (18ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 20 ம் தேதி வியாழக்கிழமை நாளை மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும், எனவே இந்த லெவல் கிராசிங் வழியாக பரளி கருங்களாப்பள்ளி, கூடலூர், கல்லுப்பட்டி, ரத்தினம் பிள்ளை புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள், விவசாயிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனத்திற்கு செல்லும் இளைஞர்கள், மாற்று வழியில் செல்ல வேண்டுமென ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The post பராமரிப்பு பணிக்காக பரளி ரயில்வே கேட் 3 நாட்களுக்கு மூடல் appeared first on Dinakaran.

Tags : Parli ,Railway ,Gate ,Parli railway gate ,Kulithlai ,Karur district ,Parali ,Railway Gate ,Dinakaran ,
× RELATED நாசரேத் ரயில்வே கேட் அருகே கோடை...