×

மணல் அள்ளுவதை தடுத்த கனிமவளத்துறை பெண் அதிகாரியை இழுத்து போட்டு தாக்குதல்: பீகாரில் 44 பேர் கும்பல் கைது

பாட்னா: பீகாரில் மணல் அள்ளுவதை தடுத்த கனிமவளத்துறை பெண் அதிகாரியை இழுத்து போட்டு தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிஹ்தா நகரில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய கும்பலை, அம்மாவட்டத்தை சேர்ந்த கனிமவளத் துறை பெண் அதிகாரி ஒருவர் தடுத்தார். அதையடுத்து அந்த பெண் அதிகாரியை ஒரு கும்பல் தரதரவென்று இழுத்துச் சென்று தாக்கியும், ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இவ்விவகாரம் ெதாடர்பாக மூன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து எஸ்பி ராஜேஷ் குமார் கூறுகையில், ‘சட்டவிரோதமாக மணல் அள்ளும் கும்பலை மாவட்ட கனிமவளத்துறை பெண் அதிகாரி மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களை சமூக விரோதிகள் சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தில் பெண் அதிகாரி உட்பட 3 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

The post மணல் அள்ளுவதை தடுத்த கனிமவளத்துறை பெண் அதிகாரியை இழுத்து போட்டு தாக்குதல்: பீகாரில் 44 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Minerals Department ,Bihar ,Patna ,
× RELATED மணல் குவாரி முறைகேடு வழக்கு...