×

காவாசாக்கி வல்கான் எஸ்

காவாசாக்கி நிறுவனம், வல்கான் எஸ் என்ற குரூசர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 649 சிசி பேரரல் டிவின் லிக்விட் கூல்டு பிஎஸ்6 இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 59.94 பிஎச்பி பவரையும், 6,600 ஆர்பிஎம்-ல் 62.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. பைக்கின் எடை 235 கிலோ.

பெட்ரோல் டேங்க் 14 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650 மட்டுமின்றி, பென்னலி 502சிக்கும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த இரண்டு குரூசர் மோட்டார் சைக்கிள்களும் காவாசாக்கியின் வல்கான் எஸ்-ஐ விட விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

The post காவாசாக்கி வல்கான் எஸ் appeared first on Dinakaran.

Tags : Kawasaki ,
× RELATED இங்கிலாந்தின் பேஸ்பாலைச் சமாளிக்க...