×

மாமல்லபுரத்தில் முதல்முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெறும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் பெடரேஷன் இணைந்து போட்டியை நடத்துகின்றன. இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது. சர்வதேச சர்ஃப் ஓபன்- தமிழ்நாடு போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்க தலைவர் அருண் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர், செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது.

16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. எனவே இதுபோல சர்வதேச நிகழ்வுகள் பல நடத்த திட்டமிட்டுள்ளோம். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நான் உங்களை சந்திப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் உங்களை நேரில் சந்தித்து வருகிறேன். அதிலேயே தெரிந்துவிடும், விளையாட்டுத்துறையின் மீது இந்த அரசு எத்தனை முக்கியத்துவம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.

The post மாமல்லபுரத்தில் முதல்முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : First International Surfing Competition in Mamallapuram ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Mamallapuram ,First International Surfing Competition ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...