×

காரைக்காலில் போலி நகை அடகு வைத்த வழக்கில் சிக்கிய பெண் தொழிலதிபர் கைது

காரைக்கால்: காரைக்கால் ராஜாதி நகரை சேர்ந்த கைலாஷ் என்பவர் ராமசாமி பிள்ளை வீதியில் நகை கடை நடத்தி வருகின்றார். இவரது கடையில் போலி நகைகளை விற்க முயன்ற சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை விற்கவந்தோரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

இவ்விசாரணையில் ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் அவரது தோழியும் காரைக்கால் தொழிலதிபருமான புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து ஜெரோம்மை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் போலி நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாக வங்கி நிருவாகம் சார்பில் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்பிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நகை கடைகள், வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுயிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் அவரது பெண் நண்பர் புவனேஸ்வரி உட்பட 10 பேரை காரைக்கால் போலீசார் கைது செய்து, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள புவனேஸ்வரி சிறையில் தனக்கு பால் தர வேண்டும், புதிய டம்பளர் தர கோரி ஜெய்லரிடம் வலியுறுத்தினால் ஆனால் சிறையில் உள்ள அனைவருக்கும் ஒரே பாத்திரம் தான் என்றும் விதிமுறைப்படி பால் தரயிலாது என்பதால் சிறையில் உன்ன விரதத்தில் ஈடுபட்டுள்ளர். அதேபோல் சிறையில் உள்ள தனது ஆண் நண்பர் ஜெரோம்மை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் கணவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில் தான் சிறையில் சந்தித்து பேச முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான சான்று தந்தாள் அனுமதிப்பதாக கூறியுள்ளனர். இதனால் தகராறிலும் புவனேஸ்வரி ஈடுபட்டார். இந்த நிலையில் புவனேஸ்வரிக்கு மத்திய சிறையில் சலுகை காட்டுமாறு சிறை கண்காணிப்பாளருக்கு பணம் பார்சல் ஒன்று வந்தது அதை பிரித்து பார்த்த சிறை கண்காணிப்பார் பாஸ்கர், இதை அனுப்பியது யாரு என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றர்.

தற்போது புவனேஸ்வரி காலப்படியில் சிறையில் உள்ள நிலையில் அவரது ஆண் நண்பர் ஜெரோம் கைதிகள் அரையோடிய மருத்துவமனையில் உள்ளர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் ஜெரோம் எஸ்.ஐ. பதவியில் இருந்து அன்மையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post காரைக்காலில் போலி நகை அடகு வைத்த வழக்கில் சிக்கிய பெண் தொழிலதிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Kailash ,Karaikal Rajati ,Ramasamy Pillai Street ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...