×

ஐயப்பன் கோயிலில் சித்திரை திருவிழா

தேன்கனிக்கோட்டை, ஏப்.18: தேன்கனிக்கோட்டை அடுத்த கூச்சுவாடி நெல்லுகுந்தி கிராமம் அருகே, மேலகிரி ஐயப்பன் கோயில் சித்திரை விஷூ திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம், கோயில் குருசாமி கோபால் தலைமையில் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, 18வகை சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் நெல்லுகுந்தி, கூச்சுவாடி, கோவை குட்டை, குடிசலூர், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post ஐயப்பன் கோயிலில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Siritra Festival ,Iyappan Temple ,Honengnikotta ,Malagiri Iyappan Temple ,Sitra Vishu festival ,Koochuwadi Nestlekundhi Village ,Honeykanickotta ,Iyappan Temple Sirra Festival ,Dinakaran ,
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...