×

சோதனை ஓட்டம் துவக்கம் ரஸ்தா ரயில்வே மேம்பாலம் பணிநிறைவு

காரைக்குடி, ஏப்.18: காரைக்குடி அருகே ரஸ்தா ரயில்வே மேம்பாலம் பணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் முடிந்த நிலையில் நேற்று முதல் வாகனங்கள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் துவங்கியது. காரைக்குடி அருகே ரஸ்தா பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதியை கடந்து செல்ல வசதியாக மேம்பாலம் பணிக்கு ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பால பணிகள் துவங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்த போது இப்பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பல்வேறு பாலங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்த பாலம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று மாலை திடீரென பாலத்தை திறந்து சோதனை ஓட்டமாக வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் ரயில் வரும் நேரத்தில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

The post சோதனை ஓட்டம் துவக்கம் ரஸ்தா ரயில்வே மேம்பாலம் பணிநிறைவு appeared first on Dinakaran.

Tags : Rasta Railway ,Karaikudi ,Rasta ,Railway ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...