×

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தேசிய இயற்பியல் கருத்தரங்கம் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிப்பு

பெரம்பலூர், ஏப்.18: வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் இரண்டு நாள் தேசிய இயற்பியல் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறையும், சென்னை, தமிழ்நாடு உயர்கல்வி மாநில மன்ற மும் இணைந்து நேற்றும், இன்றும் (17,18) இரண்டு நா ட்கள் நடத்தும் தேசிய இயற்பியல் கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சிவநே சன் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை ஒன்றியக் குழு தலைவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சேகர் வாழ்த்து ரை வழங்கினார். இயற்பியல் துறைத் தலைவரும் கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கரன் வரவேற்றார். தொடர்ந்து இக்கருத்தரங்க த்தில் அழகப்பா கலை மற் றும் அறிவியல் கல்லூரி யின் இயற்பியல் துறைப் பேராசிரியர் கருணாகரன், திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார் மற்றும் நாக ப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள் ளை கல்லூரியின் ஆராய் ச்சி இயக்குநர் செந்தில் கண்ணன் ஆகியோர் கல ந்துகொண்டு வெவ்வேறு தலைப்பில் தங்களுடைய அறிவியல் கட்டுரைகளை விளக்கினர்.

இக்கருத்தரங்கத்தில் தமிழ் நாட்டின் பல்வேறு கல்லூரி களிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர் கள் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இக்க ட்டுரைகளை திருவண்ணாமலை பேராசிரியர் சுப்பிரமணியன், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி யின் முதல்வர் சேட்டு, பெர ம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியர்குமணன், அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் இயற்பியல் துறைப் பேரா சிரியர் பரணிராஜ் ஆகி யோர் மாணவர்களின் ஆ ராய்ச்சிக் கட்டுரைகளை மதிப்பீடு செய்தனர். கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள், இயற்பியல் துறை கௌரவ விரிவு ரையாளர்கள் செல்வபிரியா, அனுராதா, ராசாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கொளஞ்சிநாதன் நன்றி தெரிவித்தார்.

The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தேசிய இயற்பியல் கருத்தரங்கம் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிப்பு appeared first on Dinakaran.

Tags : National Physics ,Govt College ,Veppanthatta ,Perambalur ,National Physics Seminar ,Vepanthatta Government College ,Perambalur District, Veppanthatta… ,Dinakaran ,
× RELATED கொடுத்த பணத்தை திருப்பி தராதவரின் பைக்கினை எரித்த மூவருக்கு வலை