×

சுய உதவிக்குழு நிதியில் முறைகேடு

தஞ்சாவூர், ஏப்.18: மகளிர் சுய உதவி குழு நிதியில் முறைகேடு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுய உதவி குழு நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் சோத்தனூர் ஊராட்சியில் 12 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பிஎல்எப்-ல் இணைந்துள்ளது. மேற்படி குழுக்களுக்கு வந்த நிதியை குழுக்களுக்கு தெரிவிக்காமல் பினாமியாக பிஎல்எப் தலைவர், செயலாளர், பொருளாளர் பினாமியாகப் போட்டுக் கொண்டு மேற்படி நிதியினை பிரித்து எடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தில் நிதி வந்ததை உண்மையான பிஎல்எப் குழுக்களுக்கு தெரிவிக்காமல் முறைகேடு செய்து பணத்தை எடுத்து உள்ளனர். இதுநாள் வரை மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் பிஎல்எப் மூலமாக வந்த கடன் நிதியை முறைகேடு செய்து உள்ளனர். அரசு அளித்த நிதி பயனாளிகளுக்கு கிடைக்காமல் பினாமிகள் பெயரில் கையாடல் செய்துள்ளனர். மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அது பிஎல்எப் குழுக்களுக்கு கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிஎல்எப் நலத்திட்டங்கள் சுயதொழில் பயிற்சி ஊாரட்சி மன்ற தலைவர் வேண்டியவருக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உண்மையான பிஎல்எப் குழுக்களுக்கு உள்ள உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே ஊராட்சி நிர்வாக சீர்கேட்டை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கு வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சுய உதவிக்குழு நிதியில் முறைகேடு appeared first on Dinakaran.

Tags : SHG ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...