×

கவுன்சிலர், பொதுமக்களுடன் சேர்ந்துமாநகராட்சி பூங்கா சீரமைப்புசோலையார் அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம்

கோவை, ஏப். 18: கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை வீ.அமீது கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் சுமார் 20 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் உள்ளது. வால்பாறை பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்கும் பொருட்டு இந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனங்கள் சென்று, தீ அணைக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள ஷேக்கல் முடி எஸ்டேட், உருளிக்கல், சோலையார் அணை, பன்னிமேடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது‌. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னிமேடு மற்றும் உருளிக்கல் ஆகிய பகுதிகளில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு ஒரே வரிசையில் இருந்த 12 வீடுகள் எரிந்து நாசமாயின. தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இப்பகுதி, வால்பாறை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், தீயணைப்பு வீரர்களால் விரைந்து சென்று, தீயை அணைக்க முடியவில்லை. எனவே, ஷேக்கல் முடி எஸ்டேட், உருளிக்கல், சோலையார் அணை, பன்னிமேடு ஆகிய பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று தீயை அணைக்கும் வகையில் சோலையார் அணை பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post கவுன்சிலர், பொதுமக்களுடன் சேர்ந்து
மாநகராட்சி பூங்கா சீரமைப்பு
சோலையார் அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம்
appeared first on Dinakaran.

Tags : Cholaiyar ,Coimbatore ,Valparai Cholaiyar dam ,Cholaiyar dam ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்