×

இதய நோய்களை முன்கூட்டியே அறிய புது சாதனம் சென்னை ஐஐடி சாதனை

சென்னை: ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை எளிய அதே சமயம் நம்பகமான முறையில் மதிப்பீடு செய்யும் சாதனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. மனிதர்களின் ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், உடலின் செல் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. ஆர்ட்சென்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கருவியை, சாதாரண நபர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடல் மற்றும் கணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் இந்த கருவியை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் 5 பயன்பாட்டுக் காப்புரிமைகளை இந்த தொழில்நுட்பம் பெற்றுள்ளது. விரிவான சோதனைக்குப் பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு தற்போது இக்கருவி தயார் நிலையில் உள்ளது.
பிற்காலத்தில் வரக்கூடிய இதய நோய்களுக்கான முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளை இக்கருவி மூலம் பெறமுடியும் என ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

The post இதய நோய்களை முன்கூட்டியே அறிய புது சாதனம் சென்னை ஐஐடி சாதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai IIT ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...