×

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிகரிப்பு

வளசரவாக்கம்: மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளதையொட்டி கோயம்பேடு மார்கெட்டுக்கு திருவள்ளூர், திருச்சி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு வரத்தொடங்கி உள்ளன. தினமும் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 150 டன் அளவுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

குறிப்பாக, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, காலப்படி, செந்தூரா, ஜவாரி ஆகிய 6 வகையான மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இமாம்பசந்த் ஒரு கிலோ ரூ.120க்கும், பங்கனப்பள்ளி ரூ.50க்கும், ஜவாரி ரூ.80 முதல் ரூ.100க்கும், மல்கோவா ரூ.100 முதல் ரூ.120க்கும், செந்தூரா ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்கப்படுகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbade Market ,Coimbude Market ,Thiruvallur ,Trichy ,Salem ,Thenkasi ,Andhra Pradesh ,
× RELATED கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு!