×

ஜெர்மனி முன்னாள் அதிபருக்கு விருது

பெர்லின்: ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு ஜெர்மனியின் சிறப்பு சாதனைக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளது. முன்னாள் அதிபரின் 16 ஆண்டு கால சாதனையை அங்கீகரிக்கும் வகையில் மெர்க்கலுக்கு விருது வழங்கி கவுரவிப்பதற்கு அதிபர் பிராங் வால்டர் திட்டமிட்டுள்ளார். 4 முறை அதிபராக இருந்த மெர்க்கலுக்கு சிறந்த சாதனைக்கான விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெறும் மூன்றாவது தலைவர் மெர்க்கல். இவர்ஏற்கனவே மேற்கு ஜெர்மனியின் முதல் தலைவர் கோன்ராட் மற்றும் ஜெர்மனியை ஒருங்கிணைக்க பாடுபட்ட ஹெல்மட் கோல் ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளனர்.

The post ஜெர்மனி முன்னாள் அதிபருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Berlin ,Angela Merkel ,Germany ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…