×

ஆதிக் அகமது கொலை விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைத்தது உபி போலீஸ்

லக்னோ: முன்னாள் எம்பியும், பிரபல தாதாவுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை உத்தரப்பிரேதச போலீஸ் அமைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ஆதிக் அகமது மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ள இவரும், இவரது சகோதரர் அஷ்ரப்பும் கடந்த பிப்ரவரியில் வக்கீல் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 15ம் தேதி இரவு பிரயாக்ராஜ் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்து கொண்டிரு ந்த போது, போலீசார் முன்னிலையிலேயே 3 பேர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் போட்டபடி, துப்பாக்கியால் சுட்டதில் ஆதிக் அகமது, அஷ்ரப் சம்பவ இடத்திலேயே இறந்தனர். துப்பாக்கியால் சுட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரப்பிரதேச போலீஸ் டிஜிபி விஷ்வகர்மா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, 3 போலீஸ் உயர் அதிகாரிகள் கொண்ட விசாரணை மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

*கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்

ஆதிக் அகமது, அஷ்ரப் கொலை வழக்கில் ஹமிர்பூரை சேர்ந்த மோகித் என்ற சன்னி (23), பாண்டாவை சேர்ந்த லவ்லேஷ் திவாரி (22), காஸ்கஞ்ச்சை சேர்ந்த அருண் மவுரியா (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரயாக்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அதே சிறையில் ஆதிக் அகமதுவின் மகன் ஒருவரும் அடைக்கப்பட்டுள்ளார். எனவே பாதுகாப்பு கருதி, கைதான 3 பேரையும், உபி போலீசார் நேற்று பிரதாப்கர் மாவட்ட சிறைக்கு நேற்று மாற்றினர்.

The post ஆதிக் அகமது கொலை விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைத்தது உபி போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Adhik Ahmed ,Special Investigation Committee ,Ubi Police ,Lucknow ,Ashraf ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...