- அதிமுக மதுரை மாநாடு
- எடப்பாடி
- நம்புகிறேன்
- சென்னை
- அஇஅதிமுக
- பெரம்பூர் மண்டலம்
- தெற்கு
- இளங்கோவன்
- சென்னை வைசர் பாடி

சென்னை: சென்னை வியாசர்பாடியில் கடந்த மார்ச் 27ம் தேதி படுகொலை செய்யப்பட்ட அதிமுகவின் பெரம்பூர் பகுதி (தெற்கு) செயலாளர் இளங்கோவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி: கஞ்சா விற்பனையை பெரம்பூர் பகுதியில் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு காவல்துறைக்கு அதிமுக நிர்வாகி இளங்கோவன் தகவல் தெரிவித்தார். ஆனால் மனதை பதற வைக்கும் வகையில் மிக கொடூரமாக அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் மதுரை மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும். அத்தோடு புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருவதால், அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றார்.
The post அதிமுக மதுரை மாநாடு திருப்புமுனையாக அமையும்: எடப்பாடி நம்பிக்கை appeared first on Dinakaran.
