×

கடைக்காரர்களை தாக்கி பணம் பறித்த இரண்டு ரவுடிகள் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உதயசூரியன் நகர் 82வது பிளாக் வழியாக செல்லும்போது பாலமுருகனை இரண்டு பேர் மறித்து சரமாரியாக தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுசம்பந்தமாக ஜீவா (19) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பி.வி.காலனி பகுதியை சேர்ந்த அபிஷேக் (19) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடி புது நகர் 8வது தெருவை சேர்ந்த லெனின் (44) என்பவர் டீக் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவர் பிவி.காலனி 5வது தெரு வழியாக செல்லும்போது சர்மா நகர் பகுதியை சேர்ந்த அஜித் என்கின்ற சர்மா நகர் அஜித் (25) என்பவர் லெனினை சரமாரியாக தாக்கி ஆயிரம் ரூபாய் பறித்து சென்றார். இதுகுறித்து லெனின் கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று மாலை அஜித்தை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.

The post கடைக்காரர்களை தாக்கி பணம் பறித்த இரண்டு ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Balamurugan ,Vyasarpadi Kakanji Colony, Chennai ,Dinakaran ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி