×

கல்வராயன் மலையில் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் அதிரடி கைது!

கல்வராயன்மலை: கல்வராயன்மலையில் கச்சிராயபாளையத்தில் நடந்த சோதனையில் கஞ்சா செடியை பயிரிட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு பதுக்கி விற்கப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் கிளாக்காடு அருகே உள்ள வெங்கலூர் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கனகராஜ் மகன் அண்ணாமலை(32) என்பவரது விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா பயிரை அகற்றினர். மேலும் சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட அண்ணாமலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்வராயன் மலையில் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் அதிரடி கைது! appeared first on Dinakaran.

Tags : galvarayan mountain ,KALVARAYANMALAYA ,Kachirayapalayam ,Galvarayanmalai ,Kallakkurichi District ,Dinakaran ,
× RELATED கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை...