×

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், நைட்ஸ்டர் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 975 சிசி வி-டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 88.5 பிஎச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்-ல் 95என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. மூன்று வித ரைடிங் மோட்கள் உள்ளன.

ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளன. ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் என 2 வேரியண்ட்கள் உள்ளன. ஸ்பெஷல் வேரியண்டில் கூடுதல் வசதியாக ஹெட்லைட் கவுல், உயரமான ஹேண்டில்பார், பில்லியன் சீட் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஷோரூம் விலையாக ஸ்டாண்டர்டு வேரியண்ட் சுமார் ரூ.17.49 லட்சம் எனவும், ஸ்பெஷல் வேரியண்ட் சுமார் ரூ.18.29 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Harley Davidson ,Harley Davidson Company ,Dinakaran ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...