×

பாலக்காட்டில் புதிய உற்பத்தி பொருள் அறிமுக விழா

பாலக்காடு, ஏப்.17: கேரள மாநில அரசின் பொது நிர்வாக தொழிற்சாலை மலபார் சிமெண்ட் நிர்வாகத்தின் கீழ் புதிய டிரைமிக்ஸ் என்ற உற்பத்தி பொருளின் அறிமுக விழா இன்று (17ம் தேதி) பாலக்காட்டில் நடைபெறுகிறது. இதில் தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் பி.ராஜீவ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். பாலக்காடு மாவட்டம், வாளையாரில் அமைந்துள்ள மலபார் சிமெண்ட் தொழிற்சாலை கடந்த 1984ம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 1994 ம் ஆண்டு மலபார் கிளாஸ்க் என்ற பெயரில் பி.பி.சி சிமெண்ட் தயாரிக்கப்பட்டது.

இவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மணலும், சிமெண்ட்டும் இணைத்து டிரை மிக்ஸ் என்ற உற்பத்தி பொருள் தயார்படுத்தி முதன்முறையாக விற்பனை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவை கட்டுமானப்பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என மாநில அரசு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய உற்பத்தி பொருளின் தொடக்க விழாவை கேரள தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் பி.ராஜீவ் குத்து விளக்கேற்றி இன்று தொடங்கி வைக்கிறார். எம்எல்ஏ பிரபாகரன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். பாலக்காடு எம்பி வி.கே. ஸ்ரீ கண்டன், தொழில் வளர்ச்சித்துறை முதன்மை தலைமை செயலாளர் சுமன்பில்லா, தொழில் துறை முதன்மை செயலாளர் முகமது ஹனீஸ், புதுசேரி கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், மலபார் சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஹரிகுமார், உறுப்பினர் சுரேஷ்பாபு, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

The post பாலக்காட்டில் புதிய உற்பத்தி பொருள் அறிமுக விழா appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kerala state government ,Malabar ,Cement ,Trimix ,Dinakaran ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...