×

ஒட்டன்சத்திரம் டவுன் பள்ளிவாசல் அடுத்த ஆண்டு சொந்த கட்டிடத்தில் இயங்கும் இப்தார் விருந்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம், ஏப். 17: ஒட்டன்சத்திரம் டவுன் பள்ளிவாசல் அடுத்த ஆண்டு சொந்த கட்டிடத்தில் இயங்கும் என இப்தார் விருந்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள டவுன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்கவிழாவாக ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மௌலவிசையது அபுதாஹிர் கிராஅத் ஓதினார். பள்ளி தலைவர் ஹாஜி பசீர் அஹமது வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு நகர்மன்ற நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை நிறுவனத் தலைவர் டாக்டர் சுசில் தரியன், காந்தி சேவா சங்கநிறுவனர் வன்னி காளை, கீரனூர் குருகுல நிர்வாகி திருப்பதி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்து பேசுகையில், இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவு தொப்புள் கொடி உறவாக தொடர்கிறது. தமிழ்நாட்டில் தளபதி தலைமையிலான ஆட்சி அமைந்ததற்கு சிறுபான்மையினரின் பங்கு அதிகளவில் உள்ளது. ஒட்டன்சத்திரம் ஜமாத்தார்கள் நீண்டநாள் கோரிக்கையான கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் திமுக ஆட்சியில் சுமார் ரூ.20 லட்சத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது சிறுபான்மையினர் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும். சிறுபான்மையினர் நலன்களுக்கு குரல் கொடுக்கும் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இருக்கிறது. அடுத்த ஆண்டு டவுன் பள்ளிவாசல் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் மதினா பள்ளி தலைவர் ஹாஜி அப்துல் பாரி,நகர்மன்ற உறுப்பினர் முகமது மீரான், பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ், துணைச் செயலாளர் அப்துல் அஜீஸ், நிர்வாக குழு உறுப்பினர் ஷாஜகான் ,பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட மதினாபள்ளி, வடக்குப் பள்ளி, தர்கா பள்ளி மற்றும் இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி, கொல்லப்பட்டி ,விருப்பாட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லீம் ஜமாத்தார்கள், நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் உட்பட பலர் லந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் செயலாளர் அப்துல் ஜப்பார் நன்றி கூறினார்.

The post ஒட்டன்சத்திரம் டவுன் பள்ளிவாசல் அடுத்த ஆண்டு சொந்த கட்டிடத்தில் இயங்கும் இப்தார் விருந்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,A. Chakrapani ,Othanchatram town mosque ,Iftar ,Otanchatram ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...