×

தெற்கு ஆத்தூர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

ஆறுமுகநேரி,ஏப்.17: தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆறுமுகநேரி ஆதவா டிரஸ்ட் நிறுவனர் பாலகுமரேசன் தலைமை வகித்தார். ஆசிரியை திருமேனி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஸ்பெல்மென் வரவேற்றார். விழாவில் 28 குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு பட்டம் வழங்கப்பட்டது. இதில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.ஆசிரியை சித்ரா தேவி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரமீலா, முருகேஸ்வரி, உட்பட பலர் செய்திருந்தனர்.

The post தெற்கு ஆத்தூர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : South ,Athur School ,Arumuganeri ,South Athur ,Panchayat ,Union Middle School ,Arumukaneri Aadhava Trust ,Kindergarten graduation ,South Athur School ,Dinakaran ,
× RELATED தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத...