×

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பா மாஜி அமைச்சர் கொலை வழக்கில் கடப்பா எம்பியின் தந்தை கைது: சிபிஐ அதிகாரிகள் அதிரடி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமான விவேகானந்தா கொலை வழக்கில் கடப்பா எம்பியின் தந்தையை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமானவர் விவேகானந்தா. இவர் கடப்பா மாவட்டம், புலிவெந்துலாவில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காலை மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில், உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாக விவேகானந்தாவின் மகள் சுனிதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கடந்த 2020ம் ஆண்டு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடப்பா தொகுதி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்பி அவினாஷின் நெருங்கிய ஆதரவாளரான உதயக்குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கில் கடப்பா எம்பி அவினாஷின் தந்தை பாஸ்கர் வீடு உள்ள புலிவெந்துலாவிற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் பாஸ்கரை கைது செய்தனர். விவேகானந்தா கொலை வழக்கில் பாஸ்கருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும், கொலை நடந்த இடத்தில் இருந்தவர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தது, ஆதாரங்களை கலைத்தது போன்ற பின்னணியின் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாஸ்கரை சிபிஐ அதிகாரிகள் ஐதராபாத்திற்கு அழைத்து சென்றனர். ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனையில் 1 மணிநேரம் பரிசோதனை நடந்தது. பின்னர், சிபிஐ மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி சென்சூலகூடா சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே கடப்பா எம்பி அவினாஷசை சிபிஐ அதிகாரிகள் 4 முறை அழைத்து விசாரணை செய்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள அவினாஷ் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

The post ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பா மாஜி அமைச்சர் கொலை வழக்கில் கடப்பா எம்பியின் தந்தை கைது: சிபிஐ அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kadapa ,Andhra Chief Minister Jaganmohan ,Siddappa ,CBI ,Tirumala ,Andhra Chief Minister ,Jaganmohan Siddappa ,former minister ,Vivekananda ,
× RELATED ஜெகன்மோகனை ரிமோட் கன்ட்ரோல் மூலம்...