×

‘அங்காரகன்’ படத்தில் மீண்டும் வில்லன் ஆனார் சத்யராஜ்

சென்னை: ஜூலியன் அன்ட் ஜெரோமா இண்டர்நேஷனல் சார்பில் ஜோமோன் பிலிப், ஜீனா ஜோமோன் தயாரித்துள்ள படம், ‘அங்காரகன்’. திரைக்கதை எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராகப் பணியாற்றி, ஹீரோவாக நடித்துள்ளார் ஸ்ரீபதி. மலையாள நடிகை நியா ஹீரோயினாக நடித்துள்ளார். டெரர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தில் மீண்டும் அவர் வில்லனாக நடிக்கிறார். மேலும் ‘அங்காடித்தெரு’ மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் நடித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா உதவி யாளர் மோகன் டச்சு இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். கருந்தேள் ராஜேஷ் வசனம் எழுதியுள்ளார். 125 பாடல்களை எழுதியுள்ள கு.கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆர்.கலைவாணன் 2வது ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் டீசரை நடிகர்கள் அர்ஜூன், சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ் இணைந்து வெளியிட்டனர்.

The post ‘அங்காரகன்’ படத்தில் மீண்டும் வில்லன் ஆனார் சத்யராஜ் appeared first on Dinakaran.

Tags : Sathyaraj ,CHENNAI ,Jomon Philippe ,Gina Jomon ,Julian ,Jerome International ,
× RELATED இது வாயில வடை சுடுற கதை இல்ல - Sathyaraj Speech at Weapon Trailer Launch | Dinakaran news.