×

வசூல் குறைந்தது தொடர்பாக பொது இடத்தில் வாக்குவாதம் கோட்ட உதவி மேலாளர் கண்டக்டர் சஸ்பெண்ட்: தமிழக போக்குவரத்து கழக எம்.டி., அதிரடி

சென்னை: பஸ் டிக்கெட் வசூல் குறைந்தது தொடர்பாக, பொது இடத்தில் மக்கள் முன்னிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட உதவி மேலாளர், நடத்துனர் சஸ்ெபண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பஸ் நிலையத்தில் இருந்து, கோயம்பேடு பஸ் முனையத்துக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்து வந்தது. அங்கு சேலம் கோட்ட உதவி மேலாளர் ஷாஜகான் பணியில் இருந்தார். பஸ் கோயம்பேட்டுக்கு வந்ததும் பஸ்சின் கண்டக்டர் செல்லத்துரை, உதவி மேலாளர் ஷாஜகானிடம் கையெழுத்து வாங்க சென்றார். அப்போது ஷாஜகான், ‘‘ பஸ் கட்டண வசூல் தொகை குறைவாக உள்ளது ஏன்’’ என்று என்று கண்டக்டரிடம் கேட்டார். இதனால், அவர்கள் இடையே வார்த்தை மோதல் முற்றியது. இதை, செல்லத்துரை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த ஷாஜகான், அவரை தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், ‘‘என்னை அடிக்க உங்களுக்கு உரிமை இல்லை’’ என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசு போக்குவரத்து அதிகாரி மற்றும் ஊழியர் பணி நேரத்தில் தகராறில் ஈடுபட்டதால், அங்கு கூடியிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இந்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் வைரலாகி, உயரதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. இதுகுறித்து, சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், சம்பந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி, அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் அரசு போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வசூல் குறைந்தது தொடர்பாக பொது இடத்தில் வாக்குவாதம் கோட்ட உதவி மேலாளர் கண்டக்டர் சஸ்பெண்ட்: தமிழக போக்குவரத்து கழக எம்.டி., அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Transport Corporation ,Chennai ,Tamil Nadu Transport Corporation MD ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த...