×

ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பேட்டி

நாசரேத், ஏப்.16:எத்தனை போராட்டத்தையும் நடத்திட காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று நாசரேத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தெரிவித்தார்.
நாசரேத் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அதன்பிறகு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், அவர் தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்ய வைத்ததை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தி பதவி பறிபோனதற்காக போராடவில்லை. அவருக்கு இளைக்கப்படும் அநீதியை எதிர்த்துதான் போராடுகிறோம். அதானியை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக ஜனநாயக குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் எத்தனை போராட்டத்தை நடத்திட காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கும், தூக்கி நிறுத்துவதற்கும், ராகுல் காந்தி அறிவிக்கும் போராட்டத்துக்கு துணை நிற்போம். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதை வருகிற மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி காட்டுவார். அதை நாம் பார்க்கதான் போகிறோம். அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதற்கு என்ன கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு அண்ணாமலை மட்டுமல்ல வடக்கு மற்றும் இங்குள்ள பாஜவினர் பொய் சொல்வதில் வல்லவர்கள், அவர்கள் எதையும் சொல்லிவிட்டு போகலாம் என்ற நிலை உள்ளது. அண்ணாமலை அரசியலில் இருக்கிறார் என்பதை காட்டவே இப்படி செய்துள்ளார் என்றார்.

The post ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Urvashi Amritraj ,MLA ,Nazareth ,Urvashi Amirtaraj ,Congress ,Dinakaran ,
× RELATED வங்கி ஊழியரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது