×

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி தொடக்கம்: மாதத்திற்கு 2 மணி நேரம் பேசலாம்

வேலூர், ஏப். 16: வேலூர் பெண்கள் சிறையில் வீடியோ கால் பேசும் வசதியை டிஐஜி செந்தாமரை கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். மாதத்திற்கு 2 மணி நேரம் பேசலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள ஆண்கள் சிறையில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி கொரோனா ஊரடங்கு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆடியோ காலில் மட்டும் பேசும் முறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 10ம் தேதி சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து புழல் பெண்கள் சிறையில் சோதனை முறையில் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை புழல் பெண்கள் சிறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் கைதிகள், தங்களது குடும்பத்தினர்களிடம் வீடியோ காலில் பேசும் வசதியை சிறைத்துறை டிஐஜி செந்தாமரைகண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘புழல் சிறையில் ஒரு மாதம் சோதனை முறையில் வீடியோ கால் பேசும் வசதி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அனைத்து சிறைகளிலும் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது. இந்த வீடியோ கால் வசதி மூலம் நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் கைதிகளை நேரடியாக சிறைக்கு வந்து சந்திக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதிகள் கைதிகளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதோடு, மனஅழுத்தத்தையும் குறைக்கும். இத்திட்டம் மூலம் சிறை கைதிகளின் மனதில் சீர்சிருத்தத்தை கொண்டு வர முடியும். இந்த திட்டத்தின் மூலம் சிறையில் உள்ள கைதிகள் 3 நாட்களுக்கு ஒருமுறை என மாதத்திற்கு 10 முறை குடும்பத்தினர்களிடம் பேசிக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் 12 நிமிடங்கள் என மொத்தம் 120 நிமிடம் ேபசி கொள்ளலாம்’ என்றனர்.

The post வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி தொடக்கம்: மாதத்திற்கு 2 மணி நேரம் பேசலாம் appeared first on Dinakaran.

Tags : Vellore Women's Prison ,Vellore ,DIG ,Senthamarai Kannan ,Vellore Women's Jail ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...