×

சித்தோடு அருகே பட்டிக்குள் புகுந்து நாய் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பலி

பவானி,ஏப்.16: சித்தோடு அருகே உள்ள பேரோடு, குட்டைத் தயிர்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில். இவர், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள விவசாய தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு, அங்கு கட்டப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை கடித்துக் குதறியதில், நான்கு ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஒரு ஆடு பலத்த காயங்களுடன் உயிர் தப்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த செந்தில் மற்றும் அப்பகுதியினர் தங்கள் வீடுகளில் பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, ஒரு தெருநாய் ஆடுகள் கட்டப்பட்ட பகுதிக்கு செல்வது தெரியவந்தது. இதனால், நாய் கடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து, சித்தோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் பேரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள், நாட்டுக்கோழிகள் விலங்குகள் கடித்ததில் உயிரிழந்துள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சித்தோடு அருகே பட்டிக்குள் புகுந்து நாய் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Chithod ,Bhawani ,Senthil ,Guttai Thairpalayam, Berode ,Dinakaran ,
× RELATED தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள்...