×

பவானி தொகுதியில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்கம்

பவானி,ஏப்.16: பவானி தொகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம், மைலம்பாடி, வரதநல்லூர், சன்னியாசிபட்டி ஊராட்சிப் பகுதியில் அதிமுகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, பவானியை அடுத்த சங்கரகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு தலைமை தாங்கினார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பவானி எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பவானி ஒன்றியக் குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் கே.கே.விஸ்வநாதன், தொட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் செல்வராஜ், வரதநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சிவபெருமாள், ஜம்பை பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பவானி தொகுதியில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Bhavani Constituency ,Bhavani ,Thanipalayam ,Mylamabadi ,Varadanallur ,Sannyasipatti Panchayat ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...