×

சூரியன் எப்எம் சார்பில் மாபெரும் மகளிர் பட்டிமன்றம்: மதுரை காந்தி மியூசியத்தில் இன்று மாலை நடக்கிறது

மதுரை, ஏப். 16: சூரியன் எப்எம் நடத்தும் மாபெரும் மகளிர் பட்டிமன்றம் இன்று மாலை 6 மணிக்கு மதுரை காந்தி மியூசியம் திறந்தவெளி அரங்கில் நடக்கிறது.
மதுரை மக்களுக்கென புதுமையான நிகழ்ச்சிகளை, பாடல்களை வழங்கி வரும் சூரியன் எப்எம் பெண்கள் தினம் மற்றும் சித்திரை முதல்நாளை கொண்டாடும் வகையில், மதுரையில் முதன்முறையாக மகளிர் பட்டிமன்றத்தை இன்று நடத்துகிறது. பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் இரு அணிகளிலும் பெண் பேச்சாளர்களே பங்கேற்கின்றனர். ‘பெண்களுக்கு பெரிதும் சவாலாக இருப்பது நாடா? வீடா?’ தலைப்பில் விவாதிக்கின்றனர்.

இலவச அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், அரங்கினுள் அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் அனுமதிக்கப்படுவர். கூடுதல் விபரங்களுக்கு 91599 35935 எண்ணில் அழைக்கலாம். சூரியன் எப்எம் நடத்தும் இப்பட்டிமன்றத்தை நாச்சியார்ஸ் நிறுவனம் வழங்க, லவ்லி கார்ட்ஸ் மற்றும் அனுஜ் டைல்ஸ் நிறுவனத்தார் உடன் வழங்க, சேது பொறியியல் கல்லூரி, வேலம்மாள் மருத்துவமனை மற்றும் கண்மணி பாலகம் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர். ஹெல்த் பார்ட்னராக ப்ரீத்தி மருத்துவமனை இந்நிகழ்வில் இணைகின்றனர். ஊடகத் தோழமையை தினகரன் நாளிதழ் வழங்குகிறது.

The post சூரியன் எப்எம் சார்பில் மாபெரும் மகளிர் பட்டிமன்றம்: மதுரை காந்தி மியூசியத்தில் இன்று மாலை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Suryan FM ,Madurai ,Gandhi Museum ,Great Women's Forum ,Madurai Gandhi ,Huge Women's ,Forum ,Madurai's Gandhi Museum ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...