×

கேரள மின்துறை அமைச்சர் பேச்சு: நெல்லியாளம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பந்தலூர், ஏப்.16: நெல்லியாளம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது. நகர செயலாளர் சேகரன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரும் 18ம் தேதி பந்தலூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் நீலகிரி எம்பியும் கழக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர துணை செயலாளர்கள் சிவசுப்ரமணியம், ஷீலா, செல்வகுமார், பொருளாளர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதி குமார், எல்பிஎப் துணை பொதுச்செயலாளர் மாடசாமி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ஜெயசீலன், மூர்த்தி, இன்பராஜ், அசரப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் நன்றி கூறினார்.

The post கேரள மின்துறை அமைச்சர் பேச்சு: நெல்லியாளம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nellialam ,City DMK ,Bandalur ,Nellialam city DMK ,City Secretary ,Shekaran ,Kerala Power ,Dinakaran ,
× RELATED பழுதடைந்த நீர்தேக்க தொட்டியால் பாதிப்பு