×

அட்டப்பாடியில் 3,500 வீட்டுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்

பாலக்காடு, ஏப். 16: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி முக்காலி பாரஸ்ட் டோர்மிட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மின்வாரியத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி பேசியதாவது: அட்டப்பாடி விதூர ஆதிவாசி கிராமத்தில் ஏழை எளிய குடும்பங்களுக்காக 50 கிலோ வாட் சோலார் வின்ட் பாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவச மின்சாரம் சப்ளை செய்ய முடியும். இவற்றை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் செய்து கொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அட்டப்பாடியில் 97 காலனிகளாக 3 ஆயிரத்து 500 வீட்டுக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு தேவையான மின் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ வக்கீல் ஷம்சுதீன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் தர்மல உட்பட அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

The post அட்டப்பாடியில் 3,500 வீட்டுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Attapadi ,Palakkad ,Mukkali Forest Dormitory Hall ,Attappady ,Kerala ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது